ட்ரம்ப் சிகிச்சை எடுக்கும் மருத்துவமனையின் அருகே கிடந்த சந்தேகத்திற்குரிய பையினால் பரபரப்பு ஏற்பட்டது
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். மூச்சுத் திணறலும் காய்ச்சலாலும் அதிபர் அவதிப்பட்டதால் வாஷிங்டனில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அதிபர் ட்ரம்ப் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அடுத்த 48 மணி நேரம் மிக மிக முக்கியமானது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிபர் சிகிச்சை எடுத்து வரும் மருத்துவமனை அருகே சந்தேகம் படும்படியாக பை ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதனை யாரும் நெருங்கவில்லை. இதனை தொடர்ந்து காவல்துறையினர் மருத்துவமனைக்கு செல்லும் சாலையை மரித்தனர். அதன்பிறகு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு மர்ம பை குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் பரிசோதனை செய்து வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதுவரை எடுத்துச் செல்லப்பட்ட பையில் என்ன இருந்தது என்பது குறித்து தகவல் தெரியவில்லை.