Categories
உலக செய்திகள்

டிரம்ப்புக்கு கொரோனா… இனி என்ன நடக்கும் ? கணித்து சொன்ன பெண்….!!

Trumpஅமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு கொரோனா என்ன பாதிப்பை கொடுக்கும் என்பதை மறைந்த பாபா வாங்கா முன்கூட்டியே கணித்த தகவல் வெளியாகியுள்ளது

சோவியத் ஒன்றியத்தின் சரிவு, 9/11 தாக்குதல், தாய்லாந்து சுனாமி போன்று பல அழிவுகளை கொடுத்த சம்பவங்களை முன்கூட்டியே சரியாக கணித்தவர் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்கா. இவர் தனது குடும்பத்தினருக்கு சொந்தமான பண்ணை அருகே ஏற்பட்ட தூசி புயலால் தனது கண் பார்வையை இழந்தார். பார்வை பறிபோய் இருந்தாலும் அவருக்கு எதிர்கால நிகழ்வுகளை துல்லியத்துடன் கணிக்கும் சக்தி கிடைத்தது என்று அவரது ரசிகர்கள் கூறுவர்.

1996இல் பாபா வாங்கா உயிரிழந்த  நிலையில் அவரது இறுதி நாட்களில் பல விஷயங்களை கணித்துள்ளார்.  அதனை அவர் எழுதி வைக்கவில்லை என்றாலும் அவர் கூறியதை குறித்து வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் தலை விதி ஆகும்.

2020இல் மர்ம நோயால் அமெரிக்க அதிபர் பாதிக்கப்படுவர் என்றும் அந்த நோயின் தாக்கத்தினால் காது கேட்காமல் மூளைக்கட்டியுடன் அவர் முடங்கிப் இருப்பார் என்றும் பாபா வாங்கா கணித்ததாக கூறப்படுகிறது.

அதோடு 2023 ஆம் ஆண்டு சுற்றுப்பாதை மாற்றப்பட்டிருக்கும். அமெரிக்காவிற்கும் இத்தாலிக்கும் 2023 ஆம் ஆண்டு 2066 ஆம் ஆண்டில் காலநிலை ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக போர் எழும். அதோடு காலத்தை கடக்கும் முறை 2304 ஆம் வருடம் கண்டறியப்படும். 5079 ஆம் ஆண்டு இந்த உலகம் அதன் முடிவை குறிக்கும் என்று பாபா வாங்கா தான் இறக்கும் முன்பே கணித்துள்ளார்.

Categories

Tech |