அமெரிக்க நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை நீக்குவதற்கு கோரப்பட்ட மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் 6 ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர வன்முறை நடந்தது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை முடக்கினர். மேலும், ட்ரம்ப் உட்பட 70 ஆயிரத்திற்கும் அதிகமான டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்தது.
மக்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் தகவல்கள் பரப்பப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. மேலும், அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான நெட் செகல், டொனால்ட் ட்ரம்ப் இனி எப்போதும் ட்விட்டரை உபயோகிக்க அனுமதி கிடைக்காது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டிரம்ப் டுவிட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு கோரப்பட்ட மனு, நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்திருக்கிறது. அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டார். எனவே, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரை உபயோகிக்க தடை நீடித்து வருகிறது.