இந்தோனேசியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் 29 நபர்களுடன் சென்ற டிரக் பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இவ்வாறு விபத்தில் பலியானவர்கள் அனைவரும் சுரங்க தொழிலாளர்கள் ஆவர். ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட மேற்கு பபுவா மாகாண தலைநகரான மனோக்வரி சென்றபோது இந்த விபத்து நேர்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிரக்கில் அளவுக் கதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் கூறுகிறது. முறைசாரா சுரங்க நடவடிக்கைகள் இந்தோனேசியாவில் பொதுவானவை ஆகும். கடும் காயம் அல்லது மரணம் ஏற்படும் அபாயமுள்ள சூழலில் ஆயிரக்கணக்காண தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இது போன்ற சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், நிலச்சரிவு, வெள்ளம், சுரங்கபாதைகள் சேதம் ஏற்படுதல் ஆகிய அபாயங்களை அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.