Categories
தேசிய செய்திகள்

டிப்பர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!… நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்….!!!!

லடாக்கில் சாலை அமைப்பதற்குரிய பணியில் ஈடுபட்டிருந்தபோது சென்று கொண்டிருந்த ரிசர்வ் பொறியாளர் படையினரின் டிப்பர் லாரி ஒன்று நேற்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் இறந்தனர். அத்துடன் பலர் காயமடைந்தனர். லடாக்கின் சசோமா-சசர் லா பகுதியில் தொழிலாளர்கள் சில பேர் டிப்பர் லாரியில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விபத்தால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் அவர் கூறினார்.

Categories

Tech |