கோவை தெற்கு மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, “மக்கள் அனைவரும் தேமுதிகவிற்கு வாக்களிக்க வேண்டும். பணபலம் அதிகார பலம் படைத்தவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் கேப்டன் 40 ஆண்டுகாலமாக மக்களுக்காக உழைத்தவர். கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தற்போதைய அமைச்சர் என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதில் தான் மும்முரம் காட்டுகின்றனர். ஏதாவது நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. டிபன் பாக்ஸ்கள் பணம் வைத்து கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
கேப்டனுக்கு ஒருமுறை வாய்ப்பளித்து பாருங்கள் அவர் ஆட்சியில் இல்லாதபோதே மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்தவர். இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்ற போகிறார்கள்.? என தெரியவில்லை. கோவையில் பல மாநகராட்சிகளில் இன்னும் நல்ல சாலைகள் கூட இல்லை. கோவையில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கேப்டனே நேரில் வந்து போட்டியிடுவது போல் நினைத்து மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.!” என அவர் கேட்டுக் கொண்டார்.