இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் தனது ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் 14000- க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை புதிதாக பணியில் அமர்த்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் டிசிஎஸ் நிறுவனம் புதிதாக 14,136 ஊழியர்களை பணியமத்தியது. இதையடுத்து டிசிஎஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 606,331 ஆக உள்ளது. அதுமட்டுமல்லாமல் டிசிஎஸ் ஊழியர்கள் அனைவருக்கும் 8 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை HR அதிகாரி கூறுகையில், ஊழியர்களுக்கு ஐந்து முதல் எட்டு சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு இன்னும் அதிக சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் காலாண்டில் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் 153 நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.