Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 1 முதல் அனுமதி… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் உள்அரங்குகளில் கூட்டங்கள் நடத்துவதற்கு முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 1 முதல் உள் அரங்குகளில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை நடத்தலாம் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதிகபட்சமாக 200 பேர் பங்கேற்கும் வண்ணமுள்ள அரங்குகளில் மட்டுமே கூட்டங்களை நடத்த வேண்டும்.

அவ்வாறு நடத்தப்படும் கூட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். கொரோனா பாதிப்பின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்தவெளியில் கூட்டம் நடத்த தளர்வு அளிப்பது பற்றிய உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |