தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அரசின் நிவாரண உதவிகளும் இதன் மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணி சுமையை ஈடு செய்வதற்காக ஒரு ரேஷன் அட்டைக்கு 50 பைசா வீதம் ஊக்கத்தொகையாக கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த திட்டம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் ரேஷன் ஊழியர்களுக்கு டிசம்பர் வரையிலான காலத்திற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.