Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி டிசம்பர் மாதம் விடுமுறை வங்கிகள் விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதம் வார விடுமுறைகள் உட்பட 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறை நாட்கள் மாநில வாரியாக இருப்பதால் 12 நாட்கள் விடுமுறை பொது விடுமுறை அல்ல. ஒவ்வொரு மாநிலத்தை  பொறுத்து விடுமுறை நாட்கள் மாறுபடும்.

அதன்படி டிசம்பர் 3, 5, 11, 12, 18, 19, 24, 25, 26, 27, 30, 31 ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். பல்வேறு மாநில வாரியான விடுமுறைகள் தவிர சில வார இறுதி நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே விடுமுறை நாட்களை கணக்கிட்டு பொது மக்கள் வங்கி தொடர்பான வேலைகளை முன்னரே முடித்துக் கொள்வது நல்லது.

Categories

Tech |