சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் எஸ் கார்மேகம் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2021 நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இருப்பினும் கொங்கு மண்டலத்தில் பெரிதாக திமுக கட்சி வெற்றி பெறவில்லை. இதனால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகவே முழு உழைப்பை செலுத்தி வருகின்றது. இதனை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்கிடையில் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றது. சேலம் முள்ளுவாடி கேட் மற்றும் அனைத்து பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதனை மாவட்ட ஆட்சியர் எஸ் கார்மேகம் நேரில் பார்வையிட்டார். இதற்கான வேலைகளில் நெடுஞ்சாலைத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்கான வேலைகளில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது. அதில் சேலம் மாநகரின் முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியும் அடங்கும். இதையொட்டி செரி ரோட்டில் நில எடுப்பு, கட்டுமானம் என 124 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.