Categories
உலக செய்திகள்

டிக் டாக் வீடியோவில் மர்மநபர்…. தோழி கொடுத்த அதிர்ச்சி தகவல்…. பாதுகாப்புக்கு வந்த பெற்றோர்….!!

பிரித்தானியாவில் பெண் டிக் டாக் செய்த வீடியோவில் மர்ம நபரின் உருவம் பதிவானதால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பெத்தானியா நாட்டின் லிவர்பூலையில் kaileigh Corby என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அவருடைய பிள்ளைகள் உறங்கிய பிறகு தனியாக உட்கார்ந்து டிக் டாக் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவை தன்னுடைய தோழிக்கு அனுப்பி பார்க்குமாறு கூறினார். இதனையடுத்து அந்த வீடியோவை பார்த்த தோழி kaileigh க்கு பின்னால் மர்ம நபரின் உருவம் நிற்பதை கவனித்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தோழி அவருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார்.  இதனால் kaileigh வீட்டில் தனியாக இருப்பதற்கு பயந்து தன்னுடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். இத்தகவலின் அடிப்படையில் அவரது பெற்றோர் பேரக்குழந்தை மற்றும் மகளின் பாதுகாப்பை கருதி உடனடியாக புறப்பட்டு kaileigh யின் விட்டிற்கு வந்துள்ளார்கள்.

Categories

Tech |