தமிழகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் டிக் டாக் மூலம் குடும்ப பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் பணம் பறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஊட்டியை சேர்ந்த டாக்சி ஓட்டுநரான கார்த்தி என்பவர் டிக் டாக் மூலம் சுபா ,லதா ,வாணி, சுந்தரி, சனா, கவிதா, அம்முராஜி ,ரோஜா, ராதே, அனு,புஷ்பா , கோகிலா, விகிதா மற்றுமொரு வடமாநில பெண் உட்பட 15 குடும்ப பெண்களை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார் .பிறகு அவர்களின் வீடியோவை வைத்து மிரட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளார். டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதை அடுத்து டகாடக் என்ற செயலி மூலம் காதல் லீலைகளை மறுபடியும் தொடர்ந்துள்ளார் .
இவரால் ஏமாற்றப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வாட்ஸ்அப்பில் ஒன்றிணைந்து அவனைப்பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது கார்த்தி போலியான வாக்குறுதிகளை கொடுத்து , பெண்களை வீடியோ எடுத்து, பணம் பறித்து வருகின்ற நிலையில் அவரின் பழைய காதலிகள் அவரை பழிவாங்கும் விதமாக, அவரைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.கார்த்தியின் ஆடியோ, வீடியோக்கள் போதுமான அளவுக்கு இருக்கிறது இருப்பினும் போலீஸ் அதிகாரிகள் அவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது தெரிய வருகிறது.