அநாகரீகமான உள்ளடக்கத்தை முறைப்படுத்த தவறியதால் பாகிஸ்தானில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது
சீனாவின் செயலியான டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் டிக் டாக்ற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அநாகரிகமான காணொளிகள் ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்கள் போன்றவற்றை தடுக்க தவறியதனால் செயலி தடை செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
பல்வேறு சமூகத்தினரிடமிருந்து தவறான காணொளிகள் டிக் டாக் மூலம் பகிர படுவதாக ஏராளமான புகார்கள் அரசுக்கு வந்துள்ளது. அதனையடுத்தே டிக் டாக் செயலியை தடை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிக் டாக் நிர்வாகம் சார்பாக பதில் எதுவும் கூறவில்லை. அனாகரிகமான மற்றும் சட்டத்திற்கு எதிரான காணொளி பதிவுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் தொலைத்தொடர்புத்துறை டிக் டாக் நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.