சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக திகழும் பாகிஸ்தான், பன்னாட்டு நிறுவனத்திற்கு உரிமையான டிக் டாக் செயலியை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் டிக் டாக் செயலி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இளம் வயதினர் மத்தியில் இந்த செயலி மிகவும் பிரபலமடைந்துள்ளது. அந்த செயலியில் அநாகரீகமான பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவ்வகையில் டிக் டாக் செயலியில் ஒழுங்குமுறை ஏற்ற மற்றும் அநாகரீகமான வீடியோக்கள் அதிக அளவு வெளியாவதாக கூறி, சார்பில் தான் தொலைத் தொடர்பு ஆணையம் அந்த செயலுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தரப்பினருக்கும் மத்தியில் இருந்த தொடர் புகார்களின் அடிப்படையில் இந்த செயலி தடை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக திகழும் பாகிஸ்தான், பன்னாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான செயலியை தடை செய்து இருப்பது சீனாவில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.