Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டிக்டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது…. அதிரடி உத்தரவு….!!!!

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோவையை சேர்ந்த யூடியூப் நடத்தும் பெண்மணி குறித்து ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த ஜனவரி 4-ஆம் தேதி சைபர் கிரைம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |