இயக்குனர் கார்த்திக் யோகியின் திருமணத்திற்கு நடிகர் சந்தானம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார் . தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் யோகியின் திருமணம் நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நடிகர் சந்தானம் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் . மேலும் டிக்கிலோனா படக்குழுவினர் அனைவரும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் கார்த்திக் யோகியின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .