சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன்சிங் ஹாக்கி வீரராக நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த படத்தில் அனைகா, ஷெரின், யோகி பாபு, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த வெட்டு புலிக்கு ஏத்த வெட்டு கிளி பார்த்தா @iamsanthanam ஜீ.எப்பிடி இருக்கீங்க.#Dikkilona படம் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!.படம் ரிலீஸ்க்கு ரெடி.நான் இதுல யாருன்னா நீங்களே பாருங்க #DikkiloonaFromSep10@kjr_studios @SoldiersFactory @ZEE5Tamil @karthikyogitw @ImSaravanan_P pic.twitter.com/WBxGRcsBe0
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 1, 2021
மேலும் இந்த படத்தில் நடிகர் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் டிக்கிலோனா படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஹர்பஜன்சிங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்த படத்தில் சர்தேவ் சிங் என்ற ஹாக்கி வீரராக நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.