தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப்-1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குரூப் 4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடை பெறுவதில்லை. ஆனால் குரூப் 1 மற்றும் குரூப் 2 நிலைகளான பணிகளுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறுகிறது.
ஒன்றிய அரசு பணிகளில் குரூப் பி பணிகளுக்கு முன்பு நேர்முகத் தேர்வு இருந்தது. சில வருடங்களுக்கு முன்பு நேர்முகத்தேர்வு நீக்கப்பட்டது. தற்போது குரூப் பி பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறுகின்றது. ரயில்வே தேர்வு வாரியமும் குரூப் பி பதவிகளுக்கு தற்போது நேர்முகத்தேர்வு இல்லாமல் எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பணி நியமனங்களை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசும் பெரும்பாலான குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.