Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ்…. தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பா?…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.. .!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்கள் பணியிடங்களை பெறுகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடைபெற வில்லை. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற ஜனவரி 8ஆம் தேதி நகராட்சி நிர்வாக திட்டமிடுதல் துறைகள் காலியிடங்களுக்கும், 9 ஆம் தேதி சுகாதார துறையின் ஒருங்கிணைந்த புள்ளியல் பணியாளர்கள் காலியிடங்களுக்கும் மற்றும் 22 ஆம் தேதி தமிழ்நாடு பொது துறையில் ஆராய்ச்சி உதவியாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வுகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை தோறும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நோய்தொற்று காலத்தில் தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முக்கிய எழுத்துத் தேர்வுகள் பற்றி அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். மேலும் ஜனவரி மாதம் நடைபெறும் இந்த 3 தேர்வுகளை மாற்றி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகும். இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |