தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்கள் பணியிடங்களை பெறுகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. அதனால் தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் 22 வகையான போட்டி தேர்வுகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தற்போது குரூப்-2 மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு துறைகளில் 100% தமிழக இளைஞர்களை நியமிக்கும் வகையில் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வில் தமிழ் முறை தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் தகுதி தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்றால்தான் மற்ற வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3, 4, 7b, 8, போன்ற அனைத்து தேர்வுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு திருத்தப்பட்ட தேர்வு பாடத்திட்டம் அதிகாரப்பூர்வமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத உள்ளவர்கள் இணையதளம் மூலம் பாடத்திட்டங்களை பார்த்து தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.