Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் அரசு துறை பணிகளுக்கு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்தவித போட்டித் தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் 2022ஆம் ஆண்டு டிஎன்பிசி தேர்வுகள் குறித்த கால அட்டவணை வெளியிட்டுள்ளது.

அதில் குரூப்-2 தேர்வு 2020 பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகும் என்றும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தேர்வு முறைகள் பாடதிட்டம் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்கள் எடுத்துச் செல்லப்படும் வாகனம் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக OMR ஷீட்டில் உள்ள அவரின் தனிப்பட்ட விவரங்கள் தனியாக பிரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் போட்டி தேர்வுகளில் தமிழ்மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளத்தால் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குரூப்2 மற்றும் 2A தேர்வுகளில் தமிழ்மொழித் தேர்வு முதன்மைத் தேர்வு டன் விரித்துரைக்கும் வகையிலான தேர்வாக அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் மற்றும் கடிதம் வரைதல் ஆகிய தலைப்புகள் இடம்பெறும் என்றும் இவற்றின் மொத்த மதிப்பு 100 என்றும் இதில் 40 மதிப்பெண் கட்டாயமாக பெறவேண்டும் என்று அறிவித்துள்ளது. அதனை போலவே குரூப்4 ல் பகுதி அ வில் தமிழ்மொழித் தேர்வு வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு இடம் பெறும், பகுதி ஆ வில் பொது அறிவு, திறனறிவு, நுண்ணறிவு ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். மேலும் பகுதி ஆ வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே இதர போட்டித் தேர்வு தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |