Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு…. இது உண்மை இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொரு வருடமும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு 10 தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்களை மட்டுமே நிரப்புவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது . இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், இந்த செய்தி உண்மை இல்லை என தெரிவித்துள்ளது. ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் முழுமையாக இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |