தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கணிசமாக குறைந்து நிலையில் சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் படி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து குரூப்-4 தேர்வு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குரூப் 4 தேர்வுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். அதனால் இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் தயார்படுத்தி வருகின்றனர். இந்த தேர்வில் 100 வினாக்கள் தமிழ் மொழிப் பாடப்பிரிவில் இருந்து கேட்கப்படும் இதில் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப்-4 தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் ஒவ்வொரு வினாக்களும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.
அதுமட்டுமில்லாமல் அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் கேட்கப்படும். இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதில் தகுதியான நபர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிஇடங்கள் வழங்கப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் இளநிலை, உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களை நிரப்பபடுவார்கள். அதனைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வில் தமிழ் மொழி பாடப் பிரிவில் 100 வினாக்களும், பொது அறிவு பகுதி 75 வினாக்கள் திறனறிவு பகுதியில் 25 வினாக்கள் கேட்கப்படும்.
பொது அறிவு பகுதியில் கேட்கப்படும் வினா தலைப்புகள்
அறிவியல்: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்
நடப்பு நிகழ்வுகள்: வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல்
புவியியல்: புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள்
வரலாறு: சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள், தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு.
இந்திய அரசியல்: அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ்.
பொருளாதாரம்: ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளாண் மற்றும் வணிக வளர்ச்சி.
இந்திய தேசிய இயக்கம்: தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு.
திறனறி வினாக்கள்: தர்க்க அறிவு மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல், எண்ணியல், கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர், சராசரி, சதவீதம், விகிதம் மற்றும் விகித சமம், மீ.பெ.வ, மீ.சி.ம , தனிவட்டி, கூட்டுவட்டி , அளவியல் பாடங்களில் பரப்பளவு மற்றும் கன அளவு , வேலை மற்றும் நேரம் , வேலை மற்றும் தூரம், வயது கணக்குகள் , இலாபம் மற்றும் நட்டம், வடிவியல், இயற்கணிதம் போன்ற தலைப்புகளில் இருந்து கேட்கப்படுகிறது.