Categories
மாநில செய்திகள்

“டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு….!!” வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஆண்டுதோறும் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு 01.9.2019 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விபரங்கள் 12.11.2019 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வாணைய அலுவலகத்தில் தட்டச்சர் பதவிக்கு நடைபெறும் கலந்தாய்வில் 15.02.2022 ம் தேதி கலந்து கொள்ளுமாறு டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. அதோடு தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விபரங்கள் அதிகாரபூர்வ இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன எனவும் டிஎன்பிஎஸ்சி  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |