Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு…. கட் ஆப் மார்க் எவ்வளவு?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அவ்வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற நிலையில் அண்மையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் குரூப் 4 தேர்வர்கள் கட் ஆப் மார்க் எவ்வளவு இருக்கும் என்று குழப்பத்தில் உள்ளனர். இதனிடையே டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளின் கணிப்பு படி, பொது பிரிவினர் (175 கேள்விகள்), BC(170), MBC(168), SC(160), ST(155) கேள்விக்கு மேல் சரியான பதில் அளித்து இருந்தால் தேர்ச்சி பெற அதிகம் வாய்ப்புள்ளது. இருப்பினும் இது மாறக்கூட வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர். மேலும் குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |