Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வர்களே மறந்துராதீங்க!…. இன்று (பிப்.23) முதல் மார்ச் 23 வரை…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

மேலும் சுமார் 5,831 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு மற்றும் அதன் கூடுதல் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இந்த குரூப்-2 தேர்வை எழுதலாம். தேர்வருடைய வயது வரம்பு 30-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். அதாவது இந்த வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும். வயது வரம்பில் மற்ற பிரிவினருக்கு சலுகைகள் உண்டு.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கு இன்று (பிப்.23) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (பிப்.23) முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை www.tnpsc.gov.in, apply.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். குரூப்-2, 2ஏ தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெறும். இனி தேர்வுகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |