Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு….பாடத்திட்டம்,கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் குறித்த முழு விபரம் இதோ…!!

குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம், கல்வித்தகுதி, தேர்வு முறை உள்ளிட்டவற்றை விரிவாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் நேர்முகத் தேர்வு உள்ள பதவிகள் மற்றும் நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள் என இருவகை படுத்தப்படும். ஆனால் இந்த இரண்டு பதவிகளுக்குமே ஒரே தேர்வு தான் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டைப் ரைட்டிங் போன்ற சிலவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் இதற்கான வயதுவரம்பு பொதுப்பிரிவினருக்கு 20 முதல் 30 வயதாகும். மற்ற பிரிவினருக்கு 40 வயது வரையும் இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2A ஆகிய தேர்வுகளுக்கு முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வு பொது அறிவு பகுதியில் 175 வினாக்களையும், கணித பகுதியில் 25 வினாக்களையும் என மொத்தமாக 300 வினாக்களை கொண்டுள்ளது. இதில் பொது அறிவு பகுதி பட்டப்படிப்புத் தரத்திலும் கணித பகுதியானது பத்தாம் வகுப்புத் தரத்திலும் கேட்கப்படும். மேலும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு 3 மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படும். மேலும் இதில் பகுதி ‘அ’ மற்றும் பகுதி ‘ஆ’ என இரண்டு பகுதிகள் உள்ளது. இதற்கும் 3 மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படும்.

முதல் பகுதியில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்தலுக்கான வினாவும், இதையடுத்து ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தலுக்கான வினாவும் கேட்கப்படும். இதில் மொத்தம் 4 வினாக்கள் கேட்கப்படுகிறது. ஒரு வினாவுக்கு 25 மதிப்பெண் வீதம் மொத்தம் 100 மதிப்பெண் கொடுக்கப்படும். இதில் 25 மதிப்பெண் பெற்றால் தான் பகுதி ‘ஆ’ தாள் மதிப்பீடு செய்யப்படும். பகுதி ‘ஆ’-இல் சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் எழுதுதல் போன்ற வகையான வினாக்கள் இடம்பெற்றிருக்கும் இவ்வாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |