Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டாஸ்மார் கடை அருகே பிணமாக கிடந்த வாலிபர்…. மாமியார் அளித்த பரபரப்பு வாக்குமூலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை கொலை செய்த 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைஅள்ளி  பகுதியில் அமைந்துள்ள மதுபான கடை முன்பு கடந்த 19-ஆம் தேதி வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த  காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் கருக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரது  மாமியார் சகுந்தலா என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது. சூர்யா மது குடித்துவிட்டு வந்து எனது மகளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் சூர்யாவை நான் கொலை செய்த முடிவு செய்தேன்.

அதேபோல் கூலிப்படைகளை சேர்ந்த பாலகிருஷ்ணன், ஐயனார்தனன் என்ற 2 பேரிடம் பணம் கொடுத்து சூர்யாவை அழைத்து சென்று மது வாங்கி கொடுக்குமாறு கூறினேன். அதன்படி அவர்களும் சூர்யாவை அழைத்து சென்று மது வாங்கி கொடுத்தனர். பின்னர் சூர்யா போதையில் இருந்தபோது அவர்கள் அரிவாலால் அவரை  சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டனர் என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணன், ஐயனார்தனன் ஆகிய 2  பேரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |