Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக் மூடல்” அவங்க தான் முடிவு பண்ணனும்…. “தலையிடமுடியாது” உயர்நீதிமன்றம்கருத்து….!!

டாஸ்மாக்  மூடும் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பை மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  பலர் வேலைவாய்ப்பு இன்றி வருகின்ற குறைந்தபட்ச வருமானத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், குடும்ப வன்முறைகளை தவிர்க்க கொரோனா பாதிப்பு முடியும்வரை டாஸ்மாக்கை மூடக்கோரி உத்தரவிடுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள்,

மதுபான கடைகள், பார்களை மூடுவது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக, மதுபானம் என்ன அத்தியாவசியப் பொருளா ? என கேள்வி கேட்ட இதே சென்னை உயர் நீதிமன்றம், தற்போது இம்மாதிரியான கருத்தை வெளியிட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |