Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் பதவி உயர்விற்கு எந்த விதிகளும் இல்லை… உயர் நீதிமன்றம் அதிர்ச்சி…!!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் விற்பனையாளராக பணியாற்றிய மகிரன் என்பவர் கடந்த 2006 ஆம் வருடம் சூப்பர்வைசர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் கடந்த 2015 ஆம் வருடம் மீண்டும் விற்பனையாளர் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை எதிர்த்து மகிரன் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எம் எஸ் சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் விசாரணையின் போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனுதாரரின் பணி வரன்முறை படுத்தப்படாததால் சூப்பர்வைசராக அவரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்வைஸர்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு எந்த விதிகளும் இல்லை எனவும் டாஸ்மாக் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி 9 வருடங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் பதவி உயர்வுக்கான விதிகள் வகுப்படாது பற்றி நீதிபதி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அரசியலில் சட்டவிதிகளின்படி இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நியமனங்கள் மேற்கொண்டதால் லட்சக்கணக்கான தகுதியான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்த தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதாக இருந்தாலும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி அவ்வாறு இல்லாமல் விருப்பம் போல் அரசியல் கட்சி பிரமுகர்களை டாஸ்மாக்கில் நியமிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் இது முறை கேடுகளுக்கும் ஊழலுக்கும் வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவாகரத்தை கவனிக்க தமிழக அரசிற்கு 60 நீதிபதி மனுதாரரை சூப்பர்வைசர் பணியில் இருந்து விற்பனையாளராக மாற்றிய விஷயத்தில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தற்போது தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

Categories

Tech |