டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் துறை ரீதியான பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனை மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். அப்போது பேசிய அவர் தமிழக டாஸ்மாக் கடைகளில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15090 விற்பனையாளர்கள் மற்றும் 3158 உதவி விற்பனையாளர்கள் என சேர்த்து மொத்தம் 25009 சில்லறை விற்பனையாளர்கள் என்று பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ரூபாய் 500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.