தமிழகத்தில் நாளை முதல் 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகியவை அமலில் உள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அவளுக்கு வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.