தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு நிமிடம் கூட மது விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒரு நிமிடம் கூட மது விற்பனை செய்யப்பட மாட்டாது.
மேலும் விற்பனை நேரம் முடிவடைந்த பிறகு பார்களில் மது விற்பனை செய்யக்கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதையும் மீறி விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையின் உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.