Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்கை திறப்பது முறைதானா…? – ஓ.பன்னீர்செல்வம் கேள்வி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்பது கொரோனா பரவலை அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் திரும்ப பெறவேண்டும். கொரோனா உயிரிழப்பு மூன்று மடங்கிற்கும் மேலாக உள்ள நிலையில் டாஸ்மாக்கை திறக்கும் முடிவு முறைதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |