Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்கில் சரக்கு வாங்க போறீங்களா…? தமிழக அரசு வைத்த ஆப்பு….!!!

மதுபான கடைகள், டாஸ்மாக் கடைகள் செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தடுப்பூசி பணியை மேலும் தீவிரப்படுத்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் இதுவரை 11 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 12-வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில் தலைநகர் சென்னையில் 13 வது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

மொத்தம் 200 வார்டுகளில் 1600 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனிடையே சென்னை, அடையாறு மேம்பாலம் அருகே மலர் மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த மா.சுப்பிரமணியம் மற்றும் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது: “புதியவகை வைரஸ் பரவி வருவதால் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளுக்கு செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |