Categories
சினிமா

டாலடிக்கும் ரத்தினமே!.. மினுமினுக்கும் முத்தாரமே!… வெளியான நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்படம்…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா சென்ற ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதையடுத்து திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் தேனிலவு பயணமாக தாய்லாந்துக்கு புறப்பட்டு, ஒரு வாரத்திற்கு பின் நாடு திரும்பினர்.

அதன்பின் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் “ஜவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் நயன்தாரா பிசியானார். இந்த நிலையில் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ்சிவன் ஸ்பெயினில் 2-வது தேனிலவு பயணத்தைத் மேற்கொண்டு உள்ளனர். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தன் மனைவி நயன்தாரா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவற்றில், டாலடிக்கும் ரத்தினமே.. மினுமினுக்கும் முத்தாரமே.. என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |