Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”டார்ச் லைட்” சின்னம் எங்களுக்கு வேண்டாம் : புதிய திருப்பம்

தமிழகத்தில் பேட்டரி டார்ச் சின்னம் பெற்றுருந்த எம்ஜிஆர் மக்கள் கட்சி பேட்டரி டார்ச் சின்னம் வேண்டாம் என தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட மக்கள் நீதி மையம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னங்களை கோரி மக்கள் நீதி மையம் விண்ணப்பித்திருந்தது.

அதில் அவர்கள் டார்ச்லைட் சின்னத்தை கேட்டிருந்தார்கள். இந்த நிலையில் தமிழகத்தை போட்டியிடுவதற்காக மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் வழங்காமல் பாண்டிச்சேரியில் போட்டியிடும் மக்கள் நீதிமயத்துக்கு பேட்டரி டார்ச்லைட் சின்னமும் ஒதுக்கப்பட்டது. இதனால் மக்கள் நீதி மையம் மிகப் பெரிய அளவிலான வருத்தத்தில் இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்திலும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே வைத்திருந்தார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை நடத்தக் கூடிய எம்ஜிஆர் விசுவநாதன் என்பவருக்கு கடந்த ஆண்டு மக்கள் நீதி மையத்துக்கு ஒதுக்கப்பட்டு இருந்த டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் தனக்கு டார்ச்லைட் சின்னம்  வேண்டாம் என்றும், எனக்கு தமிழகத்தில் இருக்க கூடிய அதிகப்படியான செல்வாக்கு காரணமாக டார்ச்லைட் சின்னத்தில் விழ வேண்டிய ஓட்டுக்கள் பாண்டிச்சேரியில் மக்கள் நீதி மையத்திற்கு விழ இருப்பதாகவும், இதனால் தன்னுடைய செல்வாக்கு பாதிக்கப்படும் என்றும் கூறி கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ளார். இதன் காரணமாக எம்ஜிஆர் பயன்படுத்திய டிராக்டர் அல்லது அவர் நினைவு கூறும் வகையில் ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்தல் ஆணையம் தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இதனால் டார்ச் லைட் சின்னம் கமலுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

Categories

Tech |