பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழாவினை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.
உலக பழங்குடியினர் தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவை முன்னிட்டு யானைகள் அணிவகுப்பு பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் நேற்று நடைபெற்றுள்ளது. இதனை ஆனைமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் கணேசன் தொடங்கி வைத்துள்ளார். இதில் உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சக்கர அலுவலர்கள் காசிலிங்கம், புகழேந்தி, வெங்கடேஷ், வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு, காவலர்கள், பாகன்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்
இந்த விழாவில் சீத்தல் ஓய்வு விடுதியில் இருந்து டாப்சிலிப் வரவேற்பு மையம் வரை யானைகள் செஸ் பலகையை சுற்றி வந்தது. மேலும் 12 யானைகளின் மீது செஸ் போர்டு போன்ற தயாரிக்கப்பட்ட பதாகையை போர்த்தப்பட்டு இருந்தது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர்.