செல்லம்மா பாடல் வீடியோ யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா, டோனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. இந்நிலையில் செல்லம்மா வீடியோ பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.