டாக்டர் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அர்ச்சனா, தீபா, யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த வருடம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது இந்த படம் வருகிற அக்டோபர் 9-ஆம் தியேட்டர்களில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் டாக்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.