Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டாக்டர் இல்லாத “அவசர சிகிச்சை பிரிவு” சிரமப்படும் நோயாளிகள்….. பொதுமக்களின் கோரிக்கை….!!

அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் இல்லாததால் நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, பல்வேறு இடங்களில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாமல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் மருத்துவர்களை ஓசூர் அரசு மருத்துவமனையில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |