டாக்டர்கள் பரிந்துரை இன்றி பொதுமக்கள் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என பிரபல மருத்துவமனையில் டீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் 18ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை உலக நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வகையில் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி தலைமையில் நேற்று நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் துணை டீன் டாக்டர் விஜய் சதீஷ்குமார், நுண்ணுயிர் துறைப் பேராசிரியர் டாக்டர் தேவசேனா மற்றும் மருத்துவ மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நுண்னுயிர் துறைக்கான நிறம் நீலம் என்பதால் நீல நிற விளக்குகளை ஒளிரச் செய்த நீல நிற ஆடைகளை அணிந்தும் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்கள் நுண்ணுயிர் துறை குறித்த விழிப்புணர்வுகளை விளக்கிக் கூறினார்.
அப்போது பேசிய டீன் டாக்டர் ஜெயந்தி அவர்கள் முறையற்ற நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரை இன்றி பயன்படுத்தினால் அது அழிக்க முடியாத வீரிய மிக்க நுண்ணுயிரகளை உருவாக்கும் எனவே மருத்துவர்களின் பரிந்துரை இன்றி நுண்ணுயிர் மருந்துகளை வாங்கவும் விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றமாகும் அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறினார். மருத்துவர்களின் பரிந்துரை இன்றி நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை சாப்பிடும்போது அதன் காலக்கெடு முடிவதற்கு உள்ள மருந்துகளை நிறுத்த கூடாது. பொதுமக்கள் மாத்திரை பயன்பாட்டை பெரும்பாலும் தவிர்த்து சத்தான உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதே ஆகச் சிறந்தது என கூறினார்.