பிரான்ஸ் நாட்டில் 14 வயதுடைய peyo என்ற குதிரையை ஒரு ஹாஸ்பிடலில் டாக்டர் போல் பயன்படுத்துகிறார்கள். அதாவது குதிரை பிறந்ததிலிருந்து மிகவும் சுறுசுறுப்பாகவும், மனிதர்களுடன் இயல்பாக பழகும் குணம் உடையது. இதன் காரணமாக peyo வின் உரிமையாளர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிரபல ஹாஸ்பிட்டலுக்கு மாதத்திற்கு 2 நாட்கள் குதிரையை அழைத்து செல்வார். இந்த குதிரை மருத்துவமனையில் இருக்கும் மன நோயாளிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் மிகவும் அன்பாக பழகி அவர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.
இந்த குதிரை ஒருநாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் இறந்து போகக் கூடிய ஒரு வாலிபரின் அறைக்கு தானாக சென்றுள்ளது. அதன்பிறகு வாலிபரிடம் குதிரை காட்டிய அன்பை பார்த்து வாலிபர் கண்கலங்கி அழுதுள்ளார். மேலும் குதிரையின் அன்பை பார்த்து மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர் குணமடைந்து நலமுடன் இருக்கிறார்கள்.