கேரள மாநிலம் இடுக்கி அருகே அரசு பேருந்து டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மூணாறில் இருந்து 60 பயணிகளுடன் எர்ணாகுளத்திற்குச் சென்ற பேருந்து சாக்கோச்சன் வாலி எனும் இடத்தில் உள்ள வளைவில் வேகமாக திரும்பியது.
அப்போது மிகப் பெரிய கல்லில் பேருந்து மோதியதால் அதில் நேரிட்ட அழுத்தத்தில் முன்பக்க டயர் ஒன்று வெடித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. சுமார் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.