கிளம்பாக்கம் வரை செல்லும் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது ப்ளூ லைன் மற்றும் கிரீன் லயன் என இரண்டு வழித்தடங்களில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை நீடிக்கும் திட்டமும் பர்பிள் லைன், ஆரஞ்சு லைன், ரெட் லைன் என புதிய விரிவாக்க திட்டங்களுக்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. புதிய விரிவாக்கத் திட்டங்களுக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் மெட்ரோ ரயில் இல்லாத பகுதிகளை இல்லை என்று சொல்லும் அளவிற்கு மாறிவிடும். இந்நிலையில் விம்கோ நகர் பனிமலையிலிருந்து விமானம் வரை செல்லும் ப்ளூ லைன் மெட்ரோ ரயில் திட்டமானது கிளாம்பாக்கம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை பிசியான ஜிஎஸ்டி ரோட்டில் 15. 5 km தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக நான்கு கோடி ரூபாய் செலவுக்கு கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை தொடர்ந்து கிளாம்பாக்கம் இரண்டாவது பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் முடிந்து செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகின்றது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னைக்கு வெளியே இருப்பதால் மாநகரக்குள் செல்ல பல்வேறு வசதிகள் செய்து தரப்பட வேண்டியுள்ளது. அதில் சென்னை மெட்ரோ சேவையும் ஒன்று. இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது விமான நிலையத்திலிருந்து இரும்புலியூர் வரை மேம்பாலம் வரவுள்ளது. இதே வழித்தடத்தில் தான் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இரண்டையும் தனித்தனியே உருவாக்கும் வகையில் ஜிஎஸ்டி சாலையில் போதிய இடவசதியும் இல்லை. எனவே டபுள் டக்கர் என்று சொல்லப்படும் இரண்டடுக்கு பாதை அமைக்கப்பட்டு ஒன்றில் வாகனமும் மற்றும் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும், குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் இடங்களில் பயணிகள் மேல் பகுதி வரை பயணிக்க வேண்டும். அதற்கான கட்டுமான வசதிகள் ஏற்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.