Categories
உலக செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை பிரமாண்ட ஒன்றுகூடல்… ஓரினசேர்க்கையாளர்கள் திட்டம்… வெளியான பரபரப்பு காரணம்…!!

பிரான்ஸ் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணியை நடத்தப்போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி ஒன்றை நடத்த உள்ளனர். இந்த பேரணி பிற்பகல் 2 மணிக்கு Place du chatelet என்னும் இடத்தில் தொடங்கி, அதன் பின் மாலை 5 மணிக்கு Place de la எனும் பகுதியில் நிறைவு பெறுகிறது. இந்த பேரணியை பல்வேறு ஓரினச்சேர்க்கையாளர்கள் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஓரினச்சேர்க்கையாளர்களின் குரலை அழுத்தமாக பதிவு செய்வதே பேரணியின் நோக்கம் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேரணியின் போது அனைவரும் கட்டாயம் தங்களது கைகளில் PCR பரிசோதனை அறிக்கையை வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரும் சனிடைசர் பாட்டில்கள், முக கவசம் ஆகியவற்றையும் கைகளில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |