சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே ஞாயிறு விடுமுறை நாட்களில் கூடுதல் புறநகர் ரயில் சேவைகளை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவற்றை கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் இடையே கூடுதல் புறநகர் ரயில் சேவையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் ஞாயிறு தோறும் சென்னை சென்ட்ரல் அரக்கோணம் இடையே கூடுதலாக 61 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Categories
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்….. கூடுதல் ரயில் சேவை…. தெற்கு ரயில்வே அதிரடி…!!!
