மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பா.ஜனதா தேசிய தலைவர் ஜே பி நட்டா மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து இருப்பதாக பேசியது பற்றி மத்திய இணை மந்திரி எல் முருகன் விளக்கம் அளித்திருக்கிறார். இது பற்றிய செய்தியாளர்களை சந்தித்து பேசிய முருகன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கின்றார்கள். பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் கருத்து சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஏனென்றால் ஆரம்ப கட்ட பணிகள் 95 சதவிகிதம் முடிந்தது எனதான் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்து வருகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
Categories
“ஜேபி நட்டா கருத்து சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை”… அரசியல்வாதிகள் விமர்சனம்… விளக்கம் அளித்த எல்.முருகன்…!!!!!
