ஜேஇஇ முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, முக்கியமான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜேஇஇ முதல்நிலை தேர்வு பிப்ரவரி 23 முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எந்த மாணவருக்கும் தபால் வழியாக ஹால்டிக்கெட் அனுப்ப படாது. மேலும் தகவலுக்கு 0120-6895200 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.